Site icon Sangathy News

லடாக் வன்முறையில் நால்வர் பலி: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இன்று போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்ததுடன் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version