Site icon Sangathy News

அமெரிக்கா: ஓட்டலில் துப்பாக்கி சூடு – 3 பேர் பலி

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் சவுத் போர்ட் யார்ட் பஸ்னி பகுதியில் கடற்கரை பகுதி அருகே ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஓட்டல் மீது திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. படகில் வந்த மர்ம கும்பல் படகில் இருந்தவாறு கடற்கரை அருகே உள்ள ஓட்டல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Exit mobile version