Site icon Sangathy News

தொடருந்தில் மோதி 14 வயதுடைய சிறுவன் பலி

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி, சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரம்புக்கனை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மெதகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.

ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தில், தனது நண்பர்களுடன் திஸ்மல்பொல தொடருந்து நிலையத்திற்கு சென்ற குறித்த சிறுவன், தொடருந்து தண்டவாளத்தில் இறங்கி அடுத்த மேடைக்கு செல்லும் போது, பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறனர்.

Exit mobile version