Site icon Sangathy News

சத்யன் குரலில் பைசன்’ படத்தின் ‘தென்நாடு’ பாடல் வெளியானது

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் முதல் சிங்கிளான தீக்கொளுத்தி 2-வது பாடலான றெக்க றெக்க மற்றும் 3 ஆவது பாடலான சீனிக்கல்லு ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், ‘பைசன்’ படத்தின் ‘தென்நாடு’ பாடல் வெளியானது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் மாரி செல்வராஜ் வரிகளை எழுத சத்யன் இப்பாடலை பாடியுள்ளார்.

 

Exit mobile version