Site icon Sangathy News

பந்தை எடுக்க முற்பட்ட மாணவன் நீரில் மூழ்கி பலி

டிக்வெல்ல பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​பந்து தற்செயலாக நீச்சல் தடாகத்தில் வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து அவர் குறித்த பந்தை எடுக்க முற்பட்டபோது நீச்சல் தடாகத்தில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 17 வயதுடைய மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version