Site icon Sangathy News

அவுஸ்திரேலிய அணித்தலைவி அலிசா ஹீலி சாதனை

13-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின.

முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்த ஆட்டத்தில்னார். பெண்கள் உலக கோப்பை வரலாற்றில் ஒரு வீராங்கனையின் 2-வது அதிவேக சதம் இதுவாகும். வெஸ்ட்இண்டீசின் டியான்ட்ரா டோட்டின் 2017-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 71 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக தொடருகிறது.

உலகக் கிண்ண போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீராங்கனைகளின் பட்டியலில் அவுஸ்திரேலிய அணித்தலைவி அலிசா ஹீலி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் 73 பந்துகளில் சதம் கடந்த நிலையில் அவர் குறித்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன்படி இவர் உலகக் கிண்ண போட்டிகளில் 4 சதங்களை விளாசியுள்ளார்.

இந்த வரிசையில் இங்கிலாந்து அணியின் நாட் சிவெர் 5 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version