Site icon Sangathy News

இலங்கை – தென் ஆப்பிரிக்கா ஆட்டம் மழையால் பாதிப்பு

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், இந்த தொடரில் கொழும்புவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமரி அதபத்து பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது .

இலங்கை அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சில மணி நேர ஆகியும் மழை நிற்காததால் போட்டி மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. போட்டி ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

 

Exit mobile version