Site icon Sangathy News

2026-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நேதன்யாகு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்த போர் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சுவார்த்தை காரணமாக நிறுத்தப்பட்டது.

நீண்ட நாட்களாக நீடித்து வந்த போரால் பொதுமக்களிடையே அவர் மீதான செல்வாக்கு சரிந்தது. மேலும் ஊழல் புகார் மற்றும் போரை நீட்டிக்காமல் அமெரிக்காவிடம் பணிந்து நிறுத்தியதற்காக அவருடைய சொந்த கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு நேரலையில் பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ‘அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?’ என கேள்வி எழுப்பினா். அதற்கு அவர் ‘ஆம் நிச்சயமாக’ என பதில் அளித்தார்.

தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என பதில் அளித்தார்.

இஸ்ரேலின் நீண்டநாள் பிரதமராக 1996-ம் ஆண்டில் இருந்து (தொடர்ச்சியாக இல்லாமல்) நேதன்யாகு உள்ள நிலையில் அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள புதிய பிரதமருக்கான தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version