Site icon Sangathy News

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்

மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 809 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அத்துடன் இங்கிலாந்து அணித்தலைவி நாட் சீவர்பிரன்ட் குறித்த தரவரிசைப் பட்டியலில் 2ஆவது இடத்திலுள்ளார்.

மேலும் தரவரிசைப் பட்டியலில் நான்காம் இடத்திலிருந்த அவுஸ்திரேலிய மகளிர் அணியின் ஆலிசா ஹீலி 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை அணியின் சமரி அத்தப்பத்து குறித்த தரவரிசைப் பட்டியலில் 12 ஆவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version