Site icon Sangathy News

5 நாட்களில் ‘பைசன்’ குவித்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள ‘பைசன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘பைசன்’ படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், ‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு இயக்குநர் மாரிசெல்வராஜ் நன்றி தெரிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான ‘பைசன்’ வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தமிழில் வரவேற்பை பெற்ற ‘பைசன்’ படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version