Site icon Sangathy News

ஆசிரியர்களுக்கு நிம்மதி: வெளியான முக்கிய அறிவிப்பு!

பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதன் மூலம், ஆசிரியர்களின் பாடசாலை நேரத்திற்கு பின்னரான பணிச்சுமை குறையும் என கல்வி இராஜாங்க அமைச்சர் மதுர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

புதிய கல்விச் மறுசீரமைப்பின் கீழ், தொகுதி முறை (Module) முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்களின் வேலைப்பளு பாடசாலை நேரத்திற்குள் மட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் நீடிக்கப்பட்ட பின்னர், ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் கல்விச் மறுசீரமைப்பின் மூலம் கல்வித் துறைக்கு மிகவும் பயனுள்ள மாற்றம் நடைபெறுகிறது என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version