Site icon Sangathy News

வரி செலுத்துவோருக்கு அவசர அறிவிப்பு

வருமான வரிக்காகப் பதிவு செய்யப்பட்ட அனைவரும் 2024-2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி வருமான திரட்டை, 2025 நவம்பர் 30 அன்று அல்லது அதற்கு முன்னர் இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உள்நாட்டு இறைவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.

காலக்கெடுவிற்குள் வருமானத் திரட்டை தாக்கல் செய்யத் தவறினால், உள்நாட்டு வருமானச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திணைக்களம் எச்சரித்துள்ளது.

வரி செலுத்துவோர், மேலும் விபரங்களை, 1944 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ, www.ird.gov.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை தொடர்புகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும் என்று இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version