Site icon Sangathy News

கோவையில் கொடூரம்: கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் கணவனின் மர்ம உறுப்பை அறுத்த மனைவி!

தமிழகம், கோயம்புத்தூர் கணபதி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில், கணவனின் மர்ம உறுப்பை மனைவி அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதான் ஹசாரிகா (33). இவர் கோவையில் பிளம்பராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி ஜிந்திக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

பிரதான் ஹசாரிகா வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அடிக்கடி தொலைபேசியில் பேசுவதாகவும் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று பிரதான் இளம் பெண் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்ததை மனைவி நேரில் கண்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பிரதான், மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது மனைவி ஜிந்தி கூரிய ஆயுதத்தால் கணவனின் மர்ம உறுப்பைத் துண்டித்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அயலவர்கள், படுகாயமடைந்த பிரதானை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், தப்பியோடிய மனைவியைத் தேடி வருகின்றனர்.

#Coimbatore #CrimeNews #BreakingNews #TamilNadu #Ganapathy #AssamCouple #DomesticViolence #PoliceInvestigation #CrimeUpdate #கோவை#கோயம்புத்தூர் #குற்றச்செய்திகள் #பரபரப்பு #அதிர்ச்சி #குடும்பதகராறு #தமிழ்நாடு #போலீஸ் #சரவணம்பட்டி #கணபதி#ViralNews #IncidentReport #MutilationCase #AssamNews #PoliceSearch #LocalNews #TamilNews #CrimeStory #SafetyAlert

Exit mobile version