Site icon Sangathy News

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக எஸ். அச்சுதன் இன்று (02) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

அவர் தனது நியமனக் கடிதத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

நியமனத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவர் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுடனான தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பை அமைச்சு வளாகத்தில் அமைந்துள்ள டங்கன் வைட் மண்டபத்தில் நடத்தினார்.

இதன்போது, நாட்டின் விளையாட்டுத் துறையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

Exit mobile version