கொழும்பு திட்டம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், ஐ. நா. சார்ந்த அமைப்புகளென 66 அமைப்புகளிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு , ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் உள்ளிட்ட 31 ஐ. நா. அமைப்புகளிலிருந்தும், கொழும்பு திட்டம் உள்ளிட்ட ஏனைய 35 சர்வதேச அமைப்புகளிலிருந்துமே அமெரிக்கா விலகியுள்ளது.
அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாகவும், இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் “அமெரிக்கா முதலில்” என்ற கொள்கைக்கும் தேசிய நலனுக்கும் முரணாக இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த முடிவால் சர்வதேச அளவில் சுகாதாரம், கல்வி, மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு அமெரிக்கா வழங்கி வந்த பெருமளவிலான நிதியுதவி நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இலங்கையை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கொழும்பு திட்டம் போன்ற அமைப்புகளில் அமெரிக்காவின் விலகல் தெற்காசியா, ஆசிய பிராந்தியத்தின் அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

