திருகோணமலையில் இன்று சனிக்கிழமையும் மழையுடனான காலநிலை நீடிக்கின்றது இதக் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் அலை அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதிகளும் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. வீரநகர், உள்ளிட்ட கரையோர பகுதிகளும் சீரற்ற கால நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கரையோர மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாக்க தரைக்கு மேல் மற்றும் வீட்டு முற்றத்துக்கு முன்னாலும், வீதியோரங்களிலும் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
தொடர் சீரற்ற வானிலையுடன் கூடிய கால நிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் குளிருடன் கூடிய கால நிலையும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

