டித்வா புயலால் பெருமளவில் சேதமடைந்த வடக்கு மற்றும் தலைமன்னார் ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹோ ரயில் நிலையத்தில் இன்று காலை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

