Site icon Sangathy News

ரயில் விபத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் , படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த சிவராசா சிவலக்சன் (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

அரியாலை 13ஆம் கட்டைப் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றைய தினம் பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளான நிலையில், யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த புகையிரத கடவை பாதுகாப்பற்ற கடவையாக காணப்படும் நிலையில் , பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற நிலையிலும் அதனை பாதுகாப்பான புகையிரத கடவையாக மாற்றம் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் , தொடர்ந்து அது பாதுகாப்பற்ற கடவையாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version