டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்வதற்கான மனிதாபிமான உதவியாக இன்னும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று அறிவித்தது.
இதன் மூலம் டித்வா சூறாவளி நிவாரணத்துக்காக அமெரிக்கா வழங்கிய மொத்த உதவிகளின் பெறுமதி 4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் சூறாவளி கரையைக் கடந்து 72 மணித்தியாலங்களுக்குள் அமெரிக்கா அறிவித்த 2 மில்லியன் அமெரிக்க டொலர்களின் தொடர்ச்சியாக இப்புதிய நிதியுதவி அமைகிறது.
இப்பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மிகச் சரியான நேரத்தில், செயற்திறனுடைய உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

