Site icon Sangathy News

இன்பருட்டி பகுதியில் 28 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

வடமராட்சி இன்பருட்டி பகுதியில் 28 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் பொலீஸார் மற்றும் இராணுவப் புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 28 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் இன்பருட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள 28 கிலோ கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் பருத்திதுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Exit mobile version