திருகோணமலை – ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்டம் கடற்கரை பகுதியில் பௌத்த மத அடையாளங்களை கொண்ட தெப்பமொன்று கரையொதுங்கியுள்ளது.
இது மியன்மார் நாட்டிலிருந்து வந்திருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்தத் தெப்பம் பௌத்த அடையாளங்களைக் கொண்டுள்ளது. பௌத்த பூஜை வழிபாடுகளின் பின் கடலில் விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

