Site icon Sangathy News

தையிட்டி விகாரையை கட்டித்தர தயார்; ஆனால், மக்களின் காணியை வழங்குங்கள்

தையிட்டி விகாரைக்குரிய காணியில் அதனைக் கட்டித் தர நாம் தயார். ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் பூர்வீக காணிகளை அவர்களிடடே வழங்குங்கள் – இவ்வாறு அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் பொதுச் செயலாளர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழைமை தனது கட்சி பணிமனையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், தையிட்டி விகாரையை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், அது அமைக்கப்பட்ட விதத்துக்கு எதிராகவே மக்கள் போராடுகின்றனர். கடந்த அரசாங்கங்கள் போன்று அநுர அரசாங்கமும் இனவாதத்தை தொடர்ந்தும் பேசாமல் அதைத் தடுக்க பாராளுமன்றில் சட்டம் இயற்றி நடைமுறையாக்க வேண்டும்.

அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் திஸ்ஸ விகாரை, செம்மணி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற பிரச்னைகளுக்கு விரைவான தீர்வு தருவோம் என்றார்கள். ஆனால, அவை அனைத்தும் இன்று காணாமல் போய்விட்டன – என்றார்.

Exit mobile version