”தமிழரின் இனப்பரம்பலையே மாற்றி யமைக்கும் கிவுல் ஓயாத் திட்ட அமுலாக் கலைத் தடுக்கும் வகையில் பெரும் எதிர்ப்புப் போராட்டங்களை நாம் நடத்தவுள்ளோம். இந்தப் போராட்டங்களில் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு மற்றைய கட்சிகளையும் கேட்டுக்கொள்கின்றோம்.’
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந் திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத் துள்ள அறிக்கையில்,
”கடந்த திங்கட்கிழமை 20ஆமதிகதி அமைச்சரவை, கிவுல் ஓயாத் திட்டத்தை அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் எப்படியாக இனப் பரம்பலை மாற்றி அமைக்கும் என்றும், தமிழ் மக்களின் உரிமைகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதையும் எமது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் நேற்று நாடாளு மன்றத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.
இந்தத் திட்ட அமுலாக்கலைத் தடுக்கும் வகையில் பாரிய எதிர்ப்புப் போராட் டங்களை நாம் நடத்தவுள்ளோம். இந்தப் போராட்டங்களில் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு மற்றைய கட்சிகளையும் கேட்டுக்கொள்கின்றோம்.
அடுத்தடுத்த நாட்களில் இது சம்பந் தமான கலந்துரையாடல்களை வவுனி யாவில் நாம் நடத்தவுள்ளோம். இதில் கலந்துகொண்டு உங்களது கருத்துக் களையும் பகிர்ந்து இந்தப் போராட் டங்களுக்கு வலுச்சேர்க்குமாறு சகல ரையும் அன்பாகக் கேட்டுக்கொள்கின் றோம்.’ – என்று குறிப்பிட்டுள்ளது

