Site icon Sangathy News

கிறீன்லாந்து விவகாரம் எங்களுக்கு தேவையற்றது: ரஷ்ய அதிபர் புடின் கருத்து

கிறீன்லாந்து விவ​காரம் எங்​களுக்கு தேவையற்ற விஷ​யம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரி​வித்​துள்​ளார்.

ஆர்​டிக் பகு​தி​யில் அமைந்​துள்ள கிறீன்​லாந்​து, ஐரோப்​பிய நாடான டென்​மார்க் ஆட்சி அதி​காரத்​தின் கீழ் உள்​ளது. பாது​காப்பு காரணங்​களுக்​காக கிரீன்​லாந்து தீவை அமெரிக்கா​வுக்கு வழங்க வேண்​டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்​பந்​தம் அளித்து வரு​கிறார். மேலும், கிறீன்லாந்தில் வாழும் சுமார் 57 ஆயிரம் மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் டாலர் அளிப்பேன் என்றும் ட்ரம்ப் கூறினார்.

இதற்கு டென்​மார்க் உள்​ளிட்ட ஐரோப்​பிய நாடு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்பை அடுத்து கிறீன்லாந்தில் டென்மார்க் அரசு படைகளை குவித்து கண்காணித்து வருகிறது. இதற்கிடையில் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிறீன்லாந்து மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவ​காரம் தொடர்​பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் மொஸ்​கோ​வில் நேற்று நிருபர்​கள் கேள்வி எழுப்பினர். இதற்கு புடின் அளித்த பதில் வரு​மாறு: கிறீன்லாந்து பகு​தியை ஒரு காலனி​யாகவே டென்​மார்க் நிர்வகித்து வரு​கிறது. அப்​பகுதி மக்​களுக்கு பல்​வேறு கட்டுப்​பாடு​களும் விதிக்​கப்​பட்டு உள்​ளன.

எந்த காரணத்துக்​காக​வும் நாங்​கள் கிறீன்லாந்தை உரிமம் கொண்​டாட மாட்​டோம். இது எங்​களுக்கு தேவை​யில்​லாத விஷ​யம். இந்த பிரச்​சினையை அவர்​களே (அமெரிக்​​கா, டென்​​மார்​க்​) தீர்​த்​து கொள்​​வார்​கள்​. இவ்​வாறு அதிபர்​ புடின்​ தெரி​வித்​துள்​ளார்​.

Exit mobile version