Site icon Sangathy News

மட்டக்களப்பு விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி!

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு கப்ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

எதிர்த் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், கப்ரக வாகனமொன்றுடன் மோதியதில், மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் இரண்டு பயணிகள் படுகாயமடைந்து மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு ஏறாவூர் 01 மற்றும் குடியரசு பகுதிகளைச் சேர்ந்த 17 மற்றும் 21 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.
கப்ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version