Site icon Sangathy News

காணாமல் போன ஆட்களின் முறைப்பாடுகள்: கிளிநொச்சியில் விசாரணை!

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்யும் இந்த ஆண்டுக்கான விசாரணை மேற்கொள்ளும் பணி கிளிநொச்சியில் நேற்று ஆரம்பமானது.

நேற்று முன் தினம் வவுனியாவில் விசாரணைகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான செயலமர்வு நீதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிலையில் நேற்று விசாரணைகளை மேற்கொள்ளும் பணி கிளிநொச்சியில் ஆரம்பமாகியது.

காணாமல் போன ஆட்கள் பற்றிய கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற 112முறைப்பாடுகள் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஸ் கட்டுலந்த தலைமையில் மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

Exit mobile version