மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வங்கியின் அனைத்து பணத்தையும் வழங்கினாலும்கூட, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அரசியல் நோக்கங்கள் நிறைவேறாது என பிரதி சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடு முழுவதும் நடத்திய வேலைநிறுத்தம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
அரசாங்கம் குறைந்தபட்ச அதிகாரத்தைக்கூட இதுவரையில் பயன்படுத்தியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருத்துவர்களுக்கு பிரச்சனைகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் அரசுக்கு கிடைக்கும் நிதி வசதிகளுக்கு ஏற்ப அந்த பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் அவர் கூறினார்.
சுமார் நூறு ஆண்டுகளாக இயங்கி வரும், தற்போது பக்குவ நிலை அடைந்திருக்கவேண்டிய ஒரு தொழிற்சங்கம் இவ்வளவு கட்டுப்பாடின்றி செயல்படுவது குறித்து கேள்வி எழுகிறது என அவர் தெரிவித்தார்.
நோயாளிகளை முன்வைத்து தங்களது கோரிக்கைகளை முன்னெடுக்க முயல்கிறார்கள் எனவும் மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம் எனவும் அமைச்சர் கூறினார்.

