நடிகர், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் நிறுவனமும், திரைப்பட மக்கள் தொடர்பாளர்களான சிங்காரவேலு, ரியாஸ் கே அகமது, பாரஸ் ரியாஸ் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த ‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ விருதுகள் வழங்கும் விழாவின் முதல் பதிப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், திரையுலகுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் படைப்பாளிகள் கவுரவிக்கப்பட்டனர்.
இந்த விருது தேர்வுக் குழுவின் தலைவராக கே.பாக்யராஜ் செயல்பட, குஷ்பு சுந்தர், இளவரசு, முரளி ராமசாமி, டி. சிவா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் குழுவில் இடம் பெற்றனர். நடிப்பு, இயக்கம், இசை, தொழில்நுட்பச் சிறப்பு மற்றும் படைப்புச் சாதனைகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிவகுமார், விஜயகுமார், ஷீலா, ராஜ, குமாரி சச்சு, குட்டி பத்மினி, அம்பிகா, பூர்ணிமா, ரேகா, எஸ்.ஜே.சூர்யா, சிம்ரன், ரவி மோகன், அர்ஜுன் தாஸ், மணிகண்டன், ஹர்ஷத் கான், ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ரெடின் கிங்ஸ்லி, தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி, கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், விக்ரமன், பி.வாசு, சுரேஷ் கிருஷ்ணா, வசந்த் சாய், வசந்தபாலன், வெற்றிமாறன், ராம், மாரி செல்வராஜ், வெங்கட் பிரபு, சிறுத்தை சிவா, ராஜ்குமார் பெரியசாமி, தேசிங் பெரியசாமி, இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருது வென்றவர்கள் விவரம்:
சிறந்த நடிகர்: தனுஷ் (இட்லி கடை)
சிறந்த நடிகை: ஐஸ்வர்யா லட்சுமி (மாமன்)
அறிமுக நடிகர்: பவிஷ் நாராயணன் (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்)
அறிமுக நடிகை: சான்வி மேகனா (குடும்பஸ்தன்)
துணை நடிகர்: சமுத்திரக்கனி (காந்தா)
துணை நடிகை: ஸ்வாசிகா (மாமன்)
வில்லன் நடிகர்: அர்ஜுன் தாஸ் (குட் பேட் அக்லி)
நகைச்சுவை நடிகர்: ரெடின் கிங்ஸ்லி (குட் பேட் அக்லி)
குழந்தை நட்சத்திரம்: கமலேஷ் ஜெகன் (டூரிஸ்ட் ஃபேமிலி)
இயக்குநர்: அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் ஃபேமிலி)
அறிமுக இயக்குநர்: சாரங் தியாகு (ஆரோமலே)
பின்னணி பாடகர்: அந்தோணி தாசன்
பின்னணி பாடகி: சஞ்சனா கல்மஞ்சே (வழித்துணையே – டிராகன்)
ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி (டிராகன்)
படத்தொகுப்பு: பிரசன்னா ஜி.கே (வீர தீர சூரன் பார்ட் 2)
திரைக்கதை: ராம் (பறந்து போ)
சிறந்த வசனம்: பிரசன்னா பாலச்சந்திரன் (குடும்பஸ்தன்), அஸ்வத் மாரிமுத்து (டிராகன்)
பாடலாசிரியர்: ராஜு முருகன் (எத்தன சாமி – இட்லி கடை)
பின்னணி இசை: நிவாஸ் கே பிரசன்னா (பைசன்)
நடன அமைப்பு: சாண்டி (கூலி)
சண்டைப்பயிற்சி: கெவின் குமார் (மதராசி)
சிறந்த திரைப்படம்: டூரிஸ்ட் ஃபேமிலி
தயாரிப்பு நிறுவனம்: செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ (லலித் குமார்)
அறிமுக இசையமைப்பாளர்: சாய் அபயங்கர் (ட்யூட்)
இந்த ஆண்டின் சிறந்த நட்சத்திரம்: ரவி மோகன்
இந்த ஆண்டின் சிறந்த அறிமுகம் : எல்.கே.அக் ஷய் குமார்
வளர்ந்து வரும் கலைஞர்: ஹர்ஷத் கான்
இந்த தசாப்தத்தின் ஹிட்மேக்கர்: சுந்தர் சி
நடுவர் குழு விருதுகள்
சிறந்த நடிகர்: மணிகண்டன் (குடும்பஸ்தன்)
நடிகை: சிம்ரன் (டூரிஸ்ட் ஃபேமிலி)
அறிமுக நடிகர்: சூர்யா விஜய் சேதுபதி (பீனிக்ஸ்)
அறிமுக நடிகை: சுஷ்மிதா பட் (லவ் மேரேஜ்)
இயக்குநர்: மாரி செல்வராஜ் (பைசன்)
அறிமுக இயக்குநர்: கலையரசன் தங்கவேல் (ஆண் பாவம் பொல்லாதது)
வில்லன் நடிகர்: எஸ்.ஜே.சூர்யா (வீர தீர சூரன் பார்ட் 2)
திரைப்படம்: குடும்பஸ்தன் பொற்கால நட்சத்திரங்கள்
பொற்கால விருதுகள்: ஷீலா, லட்சுமி, காஞ்சனா, ராஜ, குமாரி சச்சு, குட்டி பத்மினி, வெண்ணிற ஆடை நிர்மலா.
சினிமா பாரம்பரிய விருது: சிவகுமார், விஜயகுமார்.
பொற்கால எழுத்தாளர்கள்: காரைக்குடி நாராயணன், சித்ராலயா கோபு, வி.சி. குகநாதன், கலைஞானம்.
பொற்கால புகைப்படக் கலைஞர்: ஸ்டில்ஸ் ரவி.
பொற்கால இயக்குநர்: எஸ்.பி.முத்துராமன்.
நகைச்சுவை நடிகர்: வெண்ணிற ஆடை மூர்த்தி.
கேப்டன் விஜயகாந்த் எக்ஸலன்ஸ் விருது: கோகுலம் கோபாலன் (கோகுலம் ஃபிலிம்ஸ்)

