Site icon Sangathy News

‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ விருது பட்டியல் அறிவிப்பு: சிறந்த நடிகர் தனுஷ்

நடிகர், தயாரிப்​பாளர் சித்ரா லட்​சுமணனின் டூரிங் டாக்கீஸ் நிறுவனமும், திரைப்பட மக்​கள் தொடர்பாளர்களான சிங்​கார​வேலு, ரியாஸ் கே அகமது, பாரஸ் ரியாஸ் ஆகியோர் இணைந்து ஏற்​பாடு செய்த ‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ விருதுகள் வழங்​கும் விழா​வின் முதல் பதிப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில், திரை​யுல​குக்கு குறிப்​பிடத்​தக்க பங்​களிப்​பு​களை வழங்​கிய கலைஞர்​கள், தொழில்​நுட்ப வல்​லுநர்​கள் மற்​றும் படைப்​பாளி​கள் கவுரவிக்​கப்​பட்​டனர்.

இந்த விருது தேர்​வுக் குழு​வின் தலை​வ​ராக கே.​பாக்​ய​ராஜ் செயல்​பட, குஷ்பு சுந்​தர், இளவரசு, முரளி ராம​சாமி, டி. சிவா, ஆர்​.கே.செல்​வ​மணி, ஆர்​.வி.உதயகு​மார் ஆகியோர் குழு​வில் இடம் பெற்​றனர். நடிப்​பு, இயக்​கம், இசை, தொழில்​நுட்​பச் சிறப்பு மற்​றும் படைப்​புச் சாதனை​கள் உள்​ளிட்ட 30-க்​கும் மேற்​பட்ட பிரிவு​களில் விருதுகள் வழங்​கப்​பட்​டன.

நிகழ்ச்​சி​யில் சிவகு​மார், விஜயகு​மார், ஷீலா, ராஜ, குமாரி சச்​சு, குட்டி பத்​மினி, அம்​பி​கா, பூர்​ணி​மா, ரேகா, எஸ்​.ஜே.சூர்​யா, சிம்​ரன், ரவி மோகன், அர்​ஜுன் தாஸ், மணி​கண்​டன், ஹர்​ஷத் கான், ஐஸ்​வர்யா லட்​சுமி, ஸ்வாசி​கா, ரெடின் கிங்​ஸ்​லி, தயாரிப்​பாளர்​கள் கண்​ணன் ரவி, கலைப்​புலி எஸ் தாணு, சத்​யஜோதி பிலிம்ஸ் தியாக​ராஜன், இயக்​குநர்​கள் கே.எஸ்​.ரவி​கு​மார், விக்​ரமன், பி.​வாசு, சுரேஷ் கிருஷ்ணா, வசந்த் சாய், வசந்​த​பாலன், வெற்​றி​மாறன், ராம், மாரி செல்​வ​ராஜ், வெங்​கட் பிரபு, சிறுத்தை சிவா, ராஜ்கு​மார் பெரிய​சாமி, தேசிங் பெரிய​சாமி, இசையமைப்​பாளர் நிவாஸ் கே. பிரசன்னா உள்​ளிட்​ட பலர்​ கலந்​து கொண்​டனர்​.

விருது வென்றவர்கள் விவரம்:

சிறந்த நடிகர்: தனுஷ் (இட்லி கடை)

சிறந்த நடிகை: ஐஸ்வர்யா லட்சுமி (மாமன்)

அறிமுக நடிகர்: பவிஷ் நாராயணன் (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்)

அறிமுக நடிகை: சான்வி மேகனா (குடும்பஸ்தன்)

துணை நடிகர்: சமுத்திரக்கனி (காந்தா)

துணை நடிகை: ஸ்வாசிகா (மாமன்)

வில்லன் நடிகர்: அர்ஜுன் தாஸ் (குட் பேட் அக்லி)

நகைச்சுவை நடிகர்: ரெடின் கிங்ஸ்லி (குட் பேட் அக்லி)

குழந்தை நட்சத்திரம்: கமலேஷ் ஜெகன் (டூரிஸ்ட் ஃபேமிலி)

இயக்குநர்: அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் ஃபேமிலி)

அறிமுக இயக்குநர்: சாரங் தியாகு (ஆரோமலே)

பின்னணி பாடகர்: அந்தோணி தாசன்

பின்னணி பாடகி: சஞ்சனா கல்மஞ்சே (வழித்துணையே – டிராகன்)

ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி (டிராகன்)

படத்தொகுப்பு: பிரசன்னா ஜி.கே (வீர தீர சூரன் பார்ட் 2)

திரைக்கதை: ராம் (பறந்து போ)

சிறந்த வசனம்: பிரசன்னா பாலச்சந்திரன் (குடும்பஸ்தன்), அஸ்வத் மாரிமுத்து (டிராகன்)

பாடலாசிரியர்: ராஜு முருகன் (எத்தன சாமி – இட்லி கடை)

பின்னணி இசை: நிவாஸ் கே பிரசன்னா (பைசன்)

நடன அமைப்பு: சாண்டி (கூலி)

சண்டைப்பயிற்சி: கெவின் குமார் (மதராசி)

சிறந்த திரைப்படம்: டூரிஸ்ட் ஃபேமிலி

தயாரிப்பு நிறுவனம்: செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ (லலித் குமார்)

அறிமுக இசையமைப்பாளர்: சாய் அபயங்கர் (ட்யூட்)

இந்த ஆண்டின் சிறந்த நட்சத்திரம்: ரவி மோகன்

இந்த ஆண்டின் சிறந்த அறிமுகம் : எல்.கே.அக் ஷய் குமார்

வளர்ந்து வரும் கலைஞர்: ஹர்ஷத் கான்

இந்த தசாப்தத்தின் ஹிட்மேக்கர்: சுந்தர் சி

நடுவர் குழு விருதுகள்

சிறந்த நடிகர்: மணிகண்டன் (குடும்பஸ்தன்)

நடிகை: சிம்ரன் (டூரிஸ்ட் ஃபேமிலி)

அறிமுக நடிகர்: சூர்யா விஜய் சேதுபதி (பீனிக்ஸ்)

அறிமுக நடிகை: சுஷ்மிதா பட் (லவ் மேரேஜ்)

இயக்குநர்: மாரி செல்வராஜ் (பைசன்)

அறிமுக இயக்குநர்: கலையரசன் தங்கவேல் (ஆண் பாவம் பொல்லாதது)

வில்லன் நடிகர்: எஸ்.ஜே.சூர்யா (வீர தீர சூரன் பார்ட் 2)

திரைப்படம்: குடும்பஸ்தன் பொற்கால நட்சத்திரங்கள்

பொற்கால விருதுகள்: ஷீலா, லட்சுமி, காஞ்சனா, ராஜ, குமாரி சச்சு, குட்டி பத்மினி, வெண்ணிற ஆடை நிர்மலா.

சினிமா பாரம்பரிய விருது: சிவகுமார், விஜயகுமார்.

பொற்கால எழுத்தாளர்கள்: காரைக்குடி நாராயணன், சித்ராலயா கோபு, வி.சி. குகநாதன், கலைஞானம்.

பொற்கால புகைப்படக் கலைஞர்: ஸ்டில்ஸ் ரவி.

பொற்கால இயக்குநர்: எஸ்.பி.முத்துராமன்.

நகைச்சுவை நடிகர்: வெண்ணிற ஆடை மூர்த்தி.

கேப்டன் விஜயகாந்த் எக்ஸலன்ஸ் விருது: கோகுலம் கோபாலன் (கோகுலம் ஃபிலிம்ஸ்)

Exit mobile version