Sangathy News

கிளிநொச்சியில் டிப்பர் – இ.போ.ச. பஸ் மோதி விபத்து; நால்வர் படுகாயம்

மணலுடன் வந்த டிப்பரும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தும் மோதிய விபத்தில் நால்வர் படுகாயமடைந்தனர்.

கிளிநொச்சி நகரப் பகுதியில் கரடிப்போக்கு சந்திக்கு அண்மையாக இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இ. போ. ச. பேருந்தும் முறிகண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணலுடன் வந்த டிப்பரும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் இருவரும் டிப்பர் சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version