Sangathy News

பண்டத்தரிப்பு இராணுவ முகாம் அகற்றப்பட்டது!

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணி 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த காடாப்புலம் காணி இன்று புதன்கிழமை பிரதேச சண்டிலிப்பாய் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் பகுதியில் இருந்த இராணுவ முகாமும் அகற்றப்பட்டு அங்கிருந்த இராணுவத்தினர் சங்கானையில் உள்ள இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version