Site icon Sangathy News

யாழ். வந்த பிரபல தென்னிந்திய பாடகர்கள்!

தென்னிந்தியாவின் பிரபல திரையிசை பாடகர்களான உன்னிகிருஷ்ணன், அநுராதா சிறீராம் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணம் வந்தனர்.

பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு வந்த அவர்கள் மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காகவே அவர்கள் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version