Site icon Sangathy News

தையிட்டி விகாரைக்கு எதிராக இன்றும் நாளையும் போராட்டம்

தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும் அதனை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறும் இன்றும் நாளையும் விகாரைக்கு அருகாக போராட்டம் நடைபெறவுள்ளது.

இன்று மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையும், பௌர்ணமி நாளான நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும் போராட்டம் நடைபெறும்.

இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Exit mobile version