பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி கொழும்பில் உள்ள நீதி அமைச்சின் முன்பாக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
சிவில் அமைப்புகள், பல்வேறு மதங்களை சேர்ந்த மதத் தலைவர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
“அடக்குமுறைச் சட்டங்கள் ஜனநாயகத்தின் எதிரிகள்”, “மக்களை ஒடுக்கும் எந்தவொரு சட்டமூலமும் நாட்டிற்குத் தேவையில்லை”, என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர்.

