Sangathy News

மாவை சேனாதிராஜாவின் திருவுருவச் சிலை திறப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இன்று காலை கே.கே.எஸ். வீதி மாவிட்டபுரத்தில், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தத் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ்.இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறவன்புலவு சச்சிதானந்தம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிச் சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவை சேனாதிராசாவின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Exit mobile version