Site icon Sangathy News

கிராமி விருது பெற்றார் தலாய் லாமா

இசைத் துறை​யில் சாதனை படைப்​பவர்​களுக்கு அமெரிக்க ரிக்​கார்​டிங் அகாடமி கிராமி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வரு​கிறது.

திபெத் ஆன்​மிக தலை​வர் தலாய்​ லா​மா​வின்​(வயது 90) உரைகள், கதைகள், தியானங்​கள் ஆகியவை தொகுக்​கப்​பட்டு ஆடியோ புத்தக​மாக வெளி​யாகி​யுள்​ளது. சிறந்த ஆடியோ புத்​தகம் பிரிவில், தலாய்​ லா​மா​வின் உரைகள் அடங்​கிய ஆடியோ தேர்வு செய்யப்பட்​டது.

அமெரிக்​கா​வின் லொஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் நேற்று முன்​தினம் நடைபெற்ற 68ஆம் ஆண்டு கிராமி விருது விழா​வில் தலாய்லாமாவுக்கு கிராமி விருது வழங்​கப்​பட்​டது.

இதுகுறித்து சீன வெளி​யுறவுத்​ துறை செய்தி தொடர்​பாளர் லின்ஜியான் கூறுகை​யில், ”ஆன்​மிகம் என்ற பெயரில் பிரிவினைவாத செயல்​களை தலாய்​லாமா மேற்​கொள்​கிறார். மதம் என்ற போர்​வை​யில் சீனா​வுக்கு எதி​ரான பிரி​வினை வாத நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டுள்​ளார். அவருக்கு இந்த விருது வழங்குவதை​ சீனா எதிர்க்கிறது” என்​றார்​.

Exit mobile version