இசைத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு அமெரிக்க ரிக்கார்டிங் அகாடமி கிராமி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமாவின்(வயது 90) உரைகள், கதைகள், தியானங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டு ஆடியோ புத்தகமாக வெளியாகியுள்ளது. சிறந்த ஆடியோ புத்தகம் பிரிவில், தலாய் லாமாவின் உரைகள் அடங்கிய ஆடியோ தேர்வு செய்யப்பட்டது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 68ஆம் ஆண்டு கிராமி விருது விழாவில் தலாய்லாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லின்ஜியான் கூறுகையில், ”ஆன்மிகம் என்ற பெயரில் பிரிவினைவாத செயல்களை தலாய்லாமா மேற்கொள்கிறார். மதம் என்ற போர்வையில் சீனாவுக்கு எதிரான பிரிவினை வாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு இந்த விருது வழங்குவதை சீனா எதிர்க்கிறது” என்றார்.

