Site icon Sangathy News

திரு அம்பலவாணர் பேரம்பலம்

பிறப்பு02 AUG 1955 – இறப்பு03 FEB 2026
முன்னாள் அக்கராயன் பலநோக்கு கூட்டுறவுச் சங்கப் பணியாளர்
வயது 70
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) கிளிநொச்சி, Sri Lanka உதயநகர் கிழக்கு, Sri Lanka

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இல. 12 ஸ்கந்தபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், இல. 206 உதயநகர் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பேரம்பலம் அவர்கள் 03-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நீலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தனிநாயகம், குமாரவேலு மருதலிங்கம் மற்றும் தர்மரத்தினம், மயில்வாகனம், வரதராசா, அமிர்தலிங்கம், புண்ணியமூர்த்தி, ஜெயலக்‌ஷிமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராகுலன்(பிரான்ஸ்), நிறோபா(பிரான்ஸ்), நிலாஜினி(மத்திய சுற்றாடல் அதிகார சபை, வடமாகாண அலுவலகம், கிளிநொச்சி), துஷ்யந்தி(கரைச்சி பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பகீரதி(பிரான்ஸ்), நிசாந்தன்(பனசொனிக் விற்பனை முகவர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மாதுளன், டர்விகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2026 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் தற்காலிக இல்லமான உதயநகர் கிழக்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

 

தகவல்: குடும்பத்தினர்
Exit mobile version