Site icon Sangathy News

இ.போ.சபைக்கு வரலாற்றில் முதல் முறையாக பெண்நடத்துநர்கள் நியமனம்

வரலாற்றில் முதன்முறையாக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இருபது பெண் பஸ் நடத்துநர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நியமனங்களை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெகுஜன ஊடகத் துறை துணை அமைச்சர் கலாநிதி கௌசல்யா அரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட பெண் பஸ் நடத்துனர்களுக்கு புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Exit mobile version