நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இம் மாதம் 04ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான ‘INS GHARIAL’,தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று (06) இலங்கையிலிருந்து புறப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தில் அந்தக் கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வமான பிரியாவிடையை வழங்கியது.
‘INS GHARIAL’என்ற போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருந்தபோது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். மேலும், கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றது.
மேலும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைப்பால் ‘INS GHARIAL’ போர்க்கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட பத்து தற்காலிக பாலங்கள் (Baily Bridges) ஒப்படைக்கப்பட்டதும் இந்தக் உத்தியோகபூர்வ சந்திப்பின்போது நடைபெற்றது.

