Site icon Sangathy News

அடுத்த மாதம் இலங்கை வரும் உலக வங்கிப் பிரதிநிதிகள்

உலக வங்கியின் பிரதிநிதிகள் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை வரவுள்ளனர்.

2022-2023 பொருளாதார நெருக்கடியால் கைவிடப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை மீண்டும் தொடங்கும் வகையில் இந்த விஜயம் அமையவுள்ளது.

குறித்த திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் ஆகியோர் ஏற்கனவே திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவுடன் இது குறித்து ஆலோசித்துள்ளனர்.

Exit mobile version