Site icon Sangathy News

கடன் சுமையால் தவறான முடிவெடுத்து இளைஞன் மரணம்

யாழ்ப்பாணம், இளவாலை – அக்கத்தானைப் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத் என்ற இளைஞர், கடன் சுமை காரணமாகத் தவறான முடிவெடுத்து நேற்று உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் வேலை நிமித்தம் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற இவர், நேற்றுக் காலை சண்டிலிப்பாய் – அந்திரான் வாய்க்கால் பகுதியில் உள்ள துருசு ஒன்றில் சுருக்கு மாட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்த இளைஞனின் உறவினர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது, நீண்டகாலமாக நிலவி வந்த கடன் சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியினால் அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version