மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா குவானர் பார்டே நகரில் கனரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த லொறியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

