19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
21 வயதான அவர், பெண்ணொருவரைப் பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும், பாலியல் செயல்பாட்டுக்காக அவருக்குப் போதைப்பொருள் வழங்கியதற்கும் குற்றம் சுமத்தப்பட்டார்.
அவர் மீது ‘கிளாஸ் ஏ’ வகை போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சவுதாம்ப்டனில் வசித்து வரும் இலங்கை தமிழ் இளைஞர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கடந்த வாரம், பொலிகோன் பகுதியில் உள்ள ஒரு முகவரியில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து பொலிஸ் அதிகாரி கூறுகையில்:
சவுதாம்ப்டனில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், ஒரு நபர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். பெப்ரவரி 5, வியாழக்கிழமை அன்று சவுதாம்ப்டனின் பகுதியில் உள்ள ஒரு முகவரியில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக எங்களுக்கு முறைபாடு கிடைத்தது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு தற்போது பொலிஸார் தேவையான ஆதரவை வழங்கி வருகிறது-என்றார்.

