பாகிஸ்தான், சிந்து மாகாணத்தில், கராச்சி அருகில் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றும் எதிரில் வந்த லொறியும் மோதிக்கொண்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, 9 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் அறிந்து குறித்த இடத்துக்கு வந்த பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
விபத்து தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

