Site icon Sangathy News

அமரர் காசிப்பிள்ளை தளையசிங்கம் (வைத்திலிங்கம்)

பிறப்பு06 MAY 1936 – இறப்பு10 MAR 2024
முன்னாள் கிராம சேவையாளர் – அல்லைப்பிட்டி, சரவணை, கோண்டாவில், யாழ்ப்பாணம்
வயது 87
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) அரசடி, Sri Lanka Paris, France

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Epone ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்தகாசிப்பிள்ளை தளையசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : 17-02-2026

எங்கள் குடும்பத்தின் ஆலமரம் நீழ்துயில் கொண்டு
ஆண்டுகள் இரண்டு ஆனதுவே!
நீங்கள் இல்லாத ஒவ்வொரு நாளும் நமக்கு
ஒரு யுகமாய் கழிகிறது ஐயா.

என் நினைவு தெரிந்த நாள் முதலாய்
எனக்காகவே வாழ்ந்தவரல்லவா நீங்கள்..!
உங்களுக்கென்று ஓர் வாழ்க்கையை
நீங்கள் வாழ்ந்ததில்லையே..!

நீங்கள் அழைப்பது போல் தினமும்
உங்கள் குரல் கேட்கிறது மாமா.
நீங்கள் சென்ற நாள் முதலாய் தூக்கமின்றித்
தவிக்கிறேனே ஐயா..

அம்மா இல்லாத குறை தெரியாமல்
எனை வளர்த்து ஆளாக்கினீர்களே ஐயா..
நீங்கள் எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள் என்றும்
எம் நெஞ்சங்களில் உயிர்வாழும். மாமா.

மகனோடு வாழ்ந்த காலம் போதுமென்று
அம்மாவைத்தேடிப் போனீர்களா ஐயா?
நீங்கள் எமைவிட்டுப் போய்
ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும்…
உங்கள் நினைவுகள் எம்
நெஞ்சங்களை விட்டகலாது ஐயா…!

அம்மம்மா தாத்தாவை நாம் பார்த்ததில்லை..!
அப்பம்மாவும் எங்களுக்கில்லை.
நீங்கள் தானே உலகமென்று நாமிருந்தோம்.
அந்தக் கடவுளுக்கு அது பிடிக்கவில்லைப் போல..
அதுதான் உங்களை அழைத்து விட்டார் போல…

 ஆலமர விருட்சமாய் எங்களைத் தாலாட்டி
அன்பு சொரியச்சொரிய பல கதைகள் சொல்லி…
எங்களோடு வாழ்ந்த காலங்களையும் எங்களையும்
மறந்து எங்கு சென்றீர்கள் எங்கள் செல்ல அப்பப்பா…?

 இருபத்திரண்டு வருடங்கள் எங்களோடு வாழ்ந்தீர்கள்…
எம் வாழ்நாள் முழுவதும்
எம்மோடு இருப்பீர்கள் என்று நம்பினோமே அப்பப்பா..,!
எம் குழந்தைப் பருவம் முதல் உங்களோடு வாழ்ந்த காலங்கள்
எம்மால் மறக்க முடியாத பொற்காலங்கள் அப்பப்பா..,!
உங்களின் பாசமும் கண்டிப்பும் குறும்புத்தனமும்
அன்பான அரவணைப்பும் இனிமேல்
எப்படி எமக்குக் கிடைக்கும்?
மீண்டுமொரு பிறப்பிருந்தால் எங்களிடமே வந்து
பிறந்து விடுங்கள் எங்கள் செல்ல அப்பப்பா..!

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கிறோம்…

தகவல்: மகன்,மருமகள்,பேரப்பிள்ளைகள்
Exit mobile version