கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த14 ஆம் திகதி ஜிந்துபிட்டி பகுதியில் இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்தனர்.
சிகை அலங்கார நிலையம் ஒன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் மன்னாரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

