கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து பங்களாதேஷ் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட தேசியவாத கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை பதவியேற்றனர்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஏ.எம்.எம். நசீர் உதீன் முன்னிலையில் பதவியேற்றனர்.
அவர்களைத் தவிர, தெரிவுசெய்யப்பட்ட சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சிகளின் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, 297 இடங்களில் 209 இடங்களை பங்களாதேஷ் தேசியவாத கட்சி வென்றது.
இன்றைய தினம் பிற்பகலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி தனது புதிய அமைச்சரவையை அமைக்க உள்ளது.

