Site icon Sangathy News

ரி20 உலகக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது ஆஸி அணி

ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் குழுநிலைப் போட்டிகளின் முடிவில், அவுஸ்திரேலிய அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளின் போட்டி முடிவுகளின் அடிப்படையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அவுஸ்திரேலியா இழந்துள்ளது.

குழுBஇல் இன்று நடைபெறவிருந்த அயர்லாந்து மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், குறித்த இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டது.

இதற்கமைய 5 புள்ளிகளுடன் சிம்பாப்வே அணி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version