Site icon Sangathy News

மன்னாரில் டைனமைட் வெடிபொருள்களுடன் இரு மீனவர்கள் கைது!

மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் டைனமைட் வெடி பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் இரு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே இரு மீனவர்களை ஓலைத்தொடுவாய் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மூன்று தொகுதி டைனமோட் வெடி பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர்களையும் மன்னார் கடற்றொழில் நீரியல் திணைக்களத்தினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று குறித்த இரு சந்தேக நபர்களையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை இரு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் கைப்பற்றப்பட்ட டைனமைட் வெடி பொருளை இரசாயன பகுப்பாய்வுக்கு என இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பு வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version